கோவை தெற்கு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை, “அ.தி.மு.க-வை பார்த்து முதல்வர் ஸ்டாலின் அடிமை கட்சி என்கிறார். இந்தியாவிலேயே அடிமை கட்சி என்று ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது தி.மு.க தான். இந்தியாவிலேயே ஆகச்சிறந்த கட்சி அ.தி.மு.க; 1977-க்கு பிறகு அதிக முறை ஒரு பிராந்திய கட்சி ஆட்சி செய்தது என்றால் அது அ.தி.மு.க தான் “ என்றார்.