--- --:--:-- --

குடலிறக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் உயிரிழப்பு..!

10

டலூரில் திருமணமான மூன்றே மாதத்தில் குடலிறக்க சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் மீனவர் உதயகுமார். இவர் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் வெளிநாடு சென்று பணிபுரிய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

 

இதற்கான மருத்துவ பரிசோதனையின் பொழுது உதயகுமாருக்கு குடலிறக்க பிரச்சனை இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

 

இதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பின்பு தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட உதயகுமார் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இளைஞர் உயிரிழப்புக்கு மருத்துவர்கள் மீது குற்றம் சாட்டி உறவினர்கள் உடலை வாங்க மறுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon