மாமியாரை கொலை செய்ய பிளான் போட்ட மருமகள்..!
நெல்லையில் மாமியாரை கட்டையால் அடித்து கொலை செய்து செயினை திருட வந்த மர்ம நபர் தாக்கி விட்டதாக நாடகமாடிய மருமகளை போலீசார் கைது செய்தனர். சண்முகவேலுவின் மனைவி சீதாமஹாலக்ஷ்மி.
நேற்று அதிகாலை சீதா மகாலட்சுமி தூங்கிக் கொண்டிருந்த பொழுது முகத்தை துணியால் மூடிய மர்ம நபர் ஒருவர் வீட்டில் புகுந்து சீதாமஹாலக்ஷ்மியை கொடூரமாக தாக்கிய அந்த பெண் அவரது கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தங்கச் சங்கிலியை திருடி கொண்டு தப்பியோடினர்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது பற்றி விசாரணை நடத்திய போலீசார் வீட்டில் இருந்த வீட்டு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் சீதாராமலக்ஷ்மியை அடித்து கொலை செய்தது அவரது மருமகள்தான் என அம்பலமானது.
விசாரணையில் மாமியார் தன்னுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததால் கட்டையால் தாக்கியதாகவும். போலீசில் சிக்காமல் இருப்பதற்காக மாமியாரின் கழுத்தில் கிடந்த தங்குச் சங்கிலியை பறித்து கொண்டு சென்றது போல சித்தரிக்க முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீதாராமலக்ஷ்மி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மகாலட்சுமியை சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





