குழந்தை இருப்பது தெரியாமல் டிராக்டரை இயக்கிய தந்தை..பரிதாப பலி..!
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் வசிக்கும் விஜய், பிருந்தா தம்பதியின் இரண்டாவது மகன் பெயர் ஜெய்கிருஷ்ணன். இந்த குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. விஜய் அந்த பகுதியில் தினக்கூலிக்கு டிராக்டரை ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை விஜய் எடுத்துள்ளான். அப்பொழுது டிராக்டரின் பின்னால் சிறுவன் ஜெய்கிருஷ்ணன் விளையாடிக் கொண்டிருந்தார்.
இதை விஜய் கவனிக்கவில்லை. குழந்தை இருப்பது தெரியாமல் விஜய் டிராக்டரை இயக்கியுள்ளார். இதில் டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கி ஜெயகிருஷ்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தன் கையாலேயே தன் மகன் துடிதுடித்து இறந்தது கண்டு விஜய் கதறி துடித்தார். தொடர்ந்து போலீஸ் குழந்தையின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





