--- --:--:-- --

இறைச்சி இலவசமாக கேட்டு தராததால் கறிக் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு..!

7.1

ள்ளக்குறிச்சியில் இறைச்சியை இலவசமாக தர மறுத்ததால் இறைச்சி கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை அறிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் காதர் – சகீரா தம்பதியினர்.

 

அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இறைச்சி கடைக்கு வந்த அந்த பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் இறைச்சியை கடனாக கேட்டதாக தெரிகிறது. ஆனால் இறைச்சியை கடனாக கொடுக்க முடியாது எனக் கூறியதால் ஆத்திரமடைந்த ராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காதர் மற்றும் சகிலாவை வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளார்.

 

இதில் காயமடைந்த இருவரும் அந்த பகுதியில் மக்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், இறைச்சி கடைக்காரர் தம்பதியை வெட்டிய ராஜா என்பவரை கைது செய்தனர்.

 

Right Menu Icon