--- --:--:-- --

திருமணம் ஆகி ஒரு வாரமே ஆன நிலையில் உயிரிழந்த தம்பதி..!

4

ந்தோனேசியாவுக்கு இன்பச் சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த புதுமண தம்பதி படகு விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை பூவிருந்த பல்லி அடுத்த செந்நீர் குப்பம் பகுதியை சேர்ந்த விபூஷணிக்காவுக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரன் இருவருக்கும் கடந்த 1ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் இந்தோனேசியாவுக்கு இன்பச் சுற்றுலா சென்றனர்.

 

அதிவேக மோட்டார் படகில் பயணம் செய்த பொழுது விபத்து ஏற்பட்டு இருவரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்கப்பட்ட இருவரின் உடல்களை சென்னைக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon