--- --:--:-- --

அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அதிர்ச்சி..!

5

துரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மேல் கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் அளித்துள்ளது.

 

உசிலம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக அங்குள்ள பிரசவ வார்டில் நாள்தோறும் 10 முதல் 20 பிரசவங்கள் பார்க்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் மருத்துவமனையின் பிரசவ வார்டில் மேல்கூரை கான்கிரீட் பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

இதனால் அச்சத்துடனே மருத்துவமனைக்கு செல்வதாக கூறும் மக்கள் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படும் ஒன்று மேற்கூறையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon