வேதா இல்லத்தை வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கிறார்..!
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டு ஜெயலலிதாவின் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது. 10 கிரவுண்ட் பரப்பளவில் 3 மாடிகள் அமைந்துள்ள இந்த இல்லத்தில் நகரும் வகையிலான 32,721 பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
ஜெயலலிதாவுக்கு புத்தக வாசிப்பு பழக்கம் இருந்ததால் வேதா இல்லத்தில் 8,376 புத்தகங்கள் கொண்ட மினி நூலகமும் உள்ளது. 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க பொருட்கள், 601 கிலோ 474 கிராம் எடை கொண்ட 867 வெள்ளி பொருட்கள் நினைவு இல்லத்தில் இடம் பெற்றுள்ளன.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் அவர் பயன்படுத்திய புத்தகங்கள், ஜெயலலிதாவின் ஆளுமையை பிரதிபலிக்கும் பொருட்கள், அவர் பயன்படுத்திய பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நினைவிடத்தை நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







