--- --:--:-- --

எந்த பிரச்சினைக்கும் வன்முறை மூலம் தீர்வு காண முடியாது..!

10

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை நிகழ்ந்திருக்கும் நிலையில் எந்த பிரச்சினைக்கும் வன்முறை மூலம் தீர்வு காண முடியாது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

 

இதை குறிப்பிட்டிருக்கும் அவர் வன்முறையால் யாரேனும் ஒருவர் காயமடைந்தாலும் அந்த பொறுப்பை இந்த தேசமே ஏற்க வேண்டும் என கூறியுள்ளார். எனவே தேசிய நலன் கருதி மூன்று சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை டெல்லியில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக உள்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

 

இதற்கிடையே வன்முறை ஏற்பட்டது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற விவசாயி உயிரிழந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

Leave a Reply

Right Menu Icon