தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் இன்று வெளியிடுகிறார்..!
தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார். கொரொனா பரவலுக்கு பின் தமிழகத்தில் அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு புதிய தொழிற்கொள்கை ஒதுக்கப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார்.
புதிய தொழில் கொள்கை தற்போது தயாராகி விட்ட நிலையில் அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கொள்கையை இன்று வெளியிடப்படுகிறது.சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் முன்னிலையில் தமிழகத்தின் தொழில் தொடங்குவது தொடர்பாக 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் 20 தொழில் நிறுவனங்களின் உற்பத்தியையும் முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
மணப்பாறை, ஓரகடம், கும்மிடிப்பூண்டி, தருமபுரி உள்ளிட்ட இடங்களில் சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்க முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.






