--- --:--:-- --

தடுப்பு சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட கார்..!

6

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அருகே சாலையோர பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பெரியார் பட்டினத்தில் இருந்து வந்து கொண்டிருந்த கார் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தில் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

 

இதில் மருத்துவக் கல்லூரி மாணவர் அஜீத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் உடன் படித்த மாணவி ஐஸ்வர்யா லட்சுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon