கடத்த முயன்ற திருடனை காட்டிக்கொடுத்த கைக்குழந்தை..!
ராமநாதபுரம் அருகே வீட்டின் ஓட்டை பிரித்த திருடனை குழந்தையின் அழுகுரல் காட்டிக்கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜங்கள்கோட்டை காமத்தை சேர்ந்த சிவரஞ்சனி தனது இரண்டு மாத குழந்தை உடன் வீட்டில் தூங்கியுள்ளார்.
அப்போது வீட்டின் ஓட்டை பிரித்து குதித்த திருடன் தொட்டிலில் இருந்த குழந்தையை தூக்க முயன்றுள்ளார். திடீரென குழந்தை அழும் சத்தம் கேட்டு கண் விழித்து பார்த்த தாய் திருடனை பார்த்து கத்தியுள்ளார்.
சுதாரித்துக் கொண்ட திருடன் குழந்தையை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். குழந்தையின் தாய் அளித்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.





