--- --:--:-- --

மாணவிகள் விடுதியில் சுற்றும் மர்ம நபர்..!

5

கோவையில் மாணவிகள் தங்கும் விடுதி அருகே மர்ம நபர் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

 

இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர் ஒன்று சுற்றி திரிவதாக மாணவிகள் கடந்த 31ம் தேதி பல்கலைக்கழகங்களிலும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தீவிரமாக ஈடுபட்ட பல்கலைக்கழக நிர்வாகம் போலீசாருடன் இணைந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

 

ஆய்வில் மர்ம நபர் ஒருவர் விடுதி வளாகத்துக்குள் சுற்றித்திரியும் வீடியோ பதிவாகியிருந்தது. இதனை வைத்து அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Right Menu Icon