--- --:--:-- --

சைக்கிளில் சென்றவர் மீது மோதி அவரது உடலுடன் 10 கிலோ மீட்டர் சென்ற கார்..!

12

சாலையில் சைக்கிளில் சென்றவர் மீது மோதிய கார் அவரது உடலுடன் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்த சம்பவம் பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மொகாலியில் அதிவேகமாக சென்ற கார் சைக்கிளில் சென்றவர் மீது மோதிய வேகத்தில் சைக்கிளில் வந்தவர் உயிரிழந்து அவரது காரின் மேற்கூரையில் சென்று விழுந்துள்ளது.

 

ஆனால் காரை ஓட்டிச் சென்ற நபரோ காரை நிறுத்தாமல் மேற்கூரையில் சடலத்துடன் 10 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பின்னர் உடலை வீசி விட்டு சென்றுள்ளார். நிர்மல் சிங் என்ற அந்த நபரை கைது செய்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon