படிக்கட்டு உடஞ்சுருக்கு பாத்து போங்க..! தேர்வர்கள் அதிர்ச்சி..!
தேனாம்பேட்டையில் ஊரக நலப்பணிகள் திட்ட இயக்குனரகத்தில் உடைந்திருந்த படிக்கட்டால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் திட்ட இயக்குனர் அலுவலக உதவியாளருகான நேர்முகத் தேர்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்திருந்த தேர்வர்கள் ஒவ்வொருவராக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஊழியர் நேர்முகத்தேர்வுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக வரிசையில் நின்று இடைவெளியை கடைபிடிக்கவும் முகக் கவசம் அணியவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் முதல் மாடியில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்கள் படிக்கட்டு உடைஞ்சிருக்கு பார்த்து கவனமாக போங்க என கூறியுள்ளார். அந்த படிக்கட்டுகளை சரிசெய்யாமல் தேர்வுக்கு வந்தவர்களைப் பார்த்து பத்திரமா போங்க என அறிவுரை கூறிய சம்பவம் அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.






