--- --:--:-- --

இளம்பெண் பக்தர்கள் உடை மாற்றும் அறையில் இருந்த கேமரா..!

8

ராமேஸ்வரத்தில் பெண் பக்தர்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அக்னி தீர்த்த கடற்கரையில் குளித்த பக்தர்கள் தங்களது உடைகளை மாற்ற தனியார் உடைமாற்றும் அறையில் வரிசையில் காத்திருந்தனர்.

 

இளம் பெண்களை மட்டும் தனி வரிசையில் அனுப்பியதால் சந்தேகம் அடைந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உடைமாற்றும் அறையை சோதனையிட்ட பொழுது ரகசிய கேமரா இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

இது குறித்த புகாரில் ராஜேஷ் கண்ணன், மீராமைதீன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Right Menu Icon