--- --:--:-- --

காதலனுக்காக மதம் மாறிய காதலி கொலை செய்யப்பட்ட கொடூரம்..!

4

Beautiful young woman and her boyfriend in a silhouette walking in the field at sunset.

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடைப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என தொடர்ச்சியாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.

 

அதில் எதிர்பாராத பல தகவல்கள் கிடைத்துள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த லோகநாயகி என்பவர் சேலத்தில் விடுதி ஒன்றில் தங்கி பயிற்சி மையத்தில் பணியாற்றி வந்துள்ளார். போல சில நாட்களுக்கு முன்பே வெளியே சென்ற இவர் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை எனவும் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்ட பொழுது இணைப்பு கிடைக்கவில்லை எனவும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

இதன் பேரில் விசாரணையை தொடங்கிய நிலையில் லோகநாயகி ஆண் நண்பர் ஒருவருடன் ஏற்காடு சென்றது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் பெரம்பலூரை சேர்ந்த அப்துல் என்பவரை பிடித்ததாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் தனது காதலியான லோக நாயகியை கொலை செய்துவிட்டு சடலத்தை ஏற்காடு மலை பாதை புதரில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதையடுத்து அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்ட காவல்துறைக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கி வைத்தனர். அப்பொழுதுதான் பல அதிர்ச்சிகர தகவல்களை கூறியுள்ளார். 10 வயது மூத்தவரான லோகநாயகியை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார் லோகநாயகி.

 

இதனிடையே அப்துல் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய காவியா சுல்தானா என்பவரை காதலித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான் லோகநாயகி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தீராக கூறப்படும் நிலையில் அப்துல் காதலியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

 

அப்துலின் தோழிகள் இருவரும் திட்டம் தீட்ட உதவியுள்ளனர். எனவே மூவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை வருகின்றனர்.

 

Right Menu Icon