தேர்வு முடிந்ததும் மது அருந்திய சிறுவர்கள்..!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி மாணவர்கள் பிரியாணி உடன் மது அருந்திய காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காளையம்பட்டி தாலுகாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அதன் பின்பு நேராக படித்த பள்ளிக்கு வந்த மாணவர்கள் போதையில் தள்ளாடியபடியே செல்போனில் செல்பி எடுக்க வேண்டும் எனவும், இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்க அவர்கள் வந்து விரும்பிய மாணவர்களை கண்டறிந்தனர். அதன்படி மாணவர்களுக்கு மது கிடைத்தது எப்படி என விசாரிக்குமாறு காவல்துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.





