--- --:--:-- --

தூளி கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்து இறுக்கி உயிரிழப்பு..!

8

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தூளி கட்டி விளையாடிய போது சேலை கழுத்தில் இறுக்கி 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கணவனை இழந்த கீதா தனது மூத்த மகனுடன் பணிக்கு சென்றிருந்த நிலையில் இளைய மகனான சந்தோஷ் வீட்டில் சேலையில் தூளி கட்டி விளையாடிக் கொண்டு இருந்ததாகவும் அப்போது கழுத்தில் சேலை சுற்றி இறுக்கியதில் சந்தோஷ் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

 

சந்தோஷை பார்க்க வந்த சிறுவன் நிலை கண்டு அக்கம் பக்கத்துக்கு தகவல் அளித்துள்ள நிலையில் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Right Menu Icon