--- --:--:-- --

மது பிரியர்களின் கூடாரமாக மாறிய மஞ்சூர் கிராம சேவை மைய கட்டிடம் மஞ்சூர் ஊராட்சி நிர்வாகம் உறங்குகிறதா..!

7.1

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி மொத்த மக்கள் தொகை 2884 ஆகும். இவர்களில் பெண்கள் 1479 பேரும் ஆண்கள் 1405 பேரும் உள்ளனர். மேலும் வணங்கானேந்தல், ஆதி திராவிடர் காலணி, மஞ்சூர், ஆகிய ஊர்களை உள்ளடக்கிய ஊராட்சியாகும்.

இந்த ஊராட்சி மன்ற அலுவலகம் இங்குள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் இயங்கி வருகின்றன என்று கூறப்படுகிறது. ஊராட்சி முழுவதும் சுத்தமின்றியும் ஆங்காங்கே குப்பை கழிவுகள் தேங்கியும் காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் மது பிரியர்களின் அட்டகாசம் அதிகரிப்பு காரணமாக அப்பகுதியில் பெண்கள் வயதானவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் மூலமாக பாட்டில்களை சேகரித்து அலுவலக வாயில் முன்பு செயல்படாத வண்டியில் மலைபோல குவித்து வைத்து வருவதை கண்கூடாக காணமுடிகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Leave a Reply

Right Menu Icon