முட்புதருக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் சடலம்..!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே 11 வயது சிறுமியின் சடலம் முட்புதருக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் கணேசன்.
இவர் இதேப்பகுதியில் விவசாய தொழிலை செய்து வருகிறார். இவருக்கு 11 வயதில் மகள் உள்ளா.ர் இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள இன்டர்நெட் சென்டருக்கு மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சிறை சென்றுள்ளார்.
மின்சார கட்டணத்தை செலுத்திவிட்டு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. பெற்றோர்களும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
நேற்று மாலை முதல் காவல்துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள முட்புதரில் உடலில் காயங்களோடு மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






