--- --:--:-- --

ரேஷன் கடைகளில் இன்று முதல் கைவிரல் ரேகை பதிவு மீண்டும் தொடக்கம்..!

1

டைகளில் இன்று முதல் கைவிரல் ரேகை பதிவு மீண்டும் நடைமுறைக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

கொரொனா நிவாரண தொகை, மளிகை பொருட்கள் தொகுப்பு ஆகியவற்றை பெற நியாயவிலை கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கைவிரல் ரேகை நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது.

 

தற்போது நிவாரண தொகையை 98.59 விழுக்காடு வரை 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.9 விழுக்காடு வரையும் வழங்கப்பட்டுள்ளன.

 

இந்த மாத இறுதிக்குள் முழுவதுமாக வினியோகிக்கப்படும் நிலை உள்ளதால் இன்று முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணி மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோன்று கைவிரல் ரேகை அடிப்படையில் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon