அனைவருக்கும் வீடு, சுகாதார வசதி கிடைத்திட வேண்டும் என்பதே அதிமுக அரசின் நோக்கம்..!
தமிழக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்காகவே அதிமுக அரசு திட்டமிட்டு செயலாற்றி வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற வளையர் வாழ்வுரிமை மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் அதிமுக அரசில் விவசாயிகள், பெண்கள், ஏழைகள் என பல்வேறு தரப்பினரின் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார்.
மக்கள் அனைவருக்கும் வீடு, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைத்திட வேண்டும் என்பதை அதிமுக அரசின் நோக்கம் என்று முதலமைச்சர் கூறினார்.






