--- --:--:-- --

காதல் படத்தில் நடித்த நடிகர் ஆட்டோவிலேயே உயிரிழந்துள்ளார்..!

7

காதல் படத்தில் விருச்சக காந்தி என்ற பெயரில் நடித்திருந்த காமெடி நடிகர் பாபு கடைசியில் அந்தப் படத்தின் ஹீரோ போலவே சாலைகளில் சுற்றித் திரிந்த மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தில் விருச்சிககாந்த்திற்கு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பாபு.

 

மேன்ஷனில் தங்கி டைரக்டர் இயக்குனருடன் ,சான்ஸ் கேட்டு போவது போன்று விருச்சகாந்த்தின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். காதல் படத்தில் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றும் மற்ற கதாபாத்திரத்திலும் நடிக்க மாட்டேன் என்று வசனம் பேசுவார் இந்த வசனம் மிகுந்த பாப்புலர் ஆனது.

 

விருச்சககாந்த் கொஞ்சம் பாப்புலர் ஆனார் .ஓரளவிற்கு சிறந்த காமெடி நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சினிமாவில் எல்லோருக்கும் வாய்ப்புகள் அடுத்தடுத்து அமைந்து விடாது. காதல் படத்திற்கு பிறகு அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

 

சிறிய வீட்டில் தாய் தந்தை மற்றும் உடன் பிறந்தவர்களுடன் பாபு வசித்து வந்துள்ளார். பாபுவின் தாயும் தந்தையும் அடுத்தடுத்து இறந்து போகின்றனர். இதனால் பாபு மனதளவில் பெரிதளவில் பாதிக்கப்பட்டதாக செல்லப்படுகிறது தொடர்ந்து சாலைகளில் சுற்றி திரிந்துள்ளார். பின்னர் ஆட்டோவில் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon