நாய் குறுக்கே வந்ததால் நடந்த விபரீதம்..!
திருப்பூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தம்பதியினர் பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த மணி மற்றும் கவிதா தம்பதியினர் வேலை நிமித்தமாக திருப்பூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திடீரென நாய் குறுக்கே வந்ததால் தம்பதியினர் சாலையில் நிலை தடுமாறு கீழே விழுந்தனர்.
அப்பொழுது பின்னல் வந்த ஈச்சர் லாரி அவர்கள் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த தகவலறிந்து வந்த போலீசார் இரண்டு பேரின் உடல்களையும் இன்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.





