--- --:--:-- --

பிறந்த 15 நாள் ஆன குழந்தை..இரக்கமற்ற தாய், தந்தை செய்த கொடூர செயல்..!

6

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பிறகு 15 நாட்களான குழந்தை உட்பட தங்களுக்கு பிறந்த 4 குழந்தைகளை விற்பனை செய்ததாக தாய், தந்தை இடைத்தரவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

சேட்டு என்பவரின் மனைவி குண்டுமல்லிக்கு வீட்டிலேயே 6வதாக ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்படும் நிலையில் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்று குழந்தை எங்கே என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

 

அப்பொழுது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் நடத்திய விசாரணையில் சேலத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு இடைத்தரகர்கள் மூலம் குழந்தையை விற்றது தெரியவந்துள்ளது.

 

சேட்டு – குண்டுமல்லி தம்பதி ஏற்கனவே தங்களது மூன்று குழந்தைகளை விற்றிருப்பதும் விசாரணையில் உறுதியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon