குடிநீர் குழாய் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு..!
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது முகிழ்தகம் என்னும் கிராமம். இங்கு அண்ணை வேளாங்கண்ணி நகர் குடியிருப்பில் 16 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக குடிநீர் பிடிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வர்துள்ளது.
இதனை ஊராட்சி மன்ற தலைவரிடம் குடியிருப்பில் தனியாக குழாய் அமைத்து தர அண்ணை வேளாங்கன்னி நகர் குடியிருப்புவாசிகள் கேட்டும் கோரிக்கை வைத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் குழாய் அமைத்து தர வலியுறுத்தி அன்னை வேளாங்கன்னி நகர் குடியிருப்புவாசிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி ஆணையர் உம்முள் ஜாமியா இரு குடியிருப்பு வாசிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

கோரிக்கையை ஏற்று விரைவில் குடியிருப்பில் குழாய் அமைத்து தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நிகழ்வில் தொண்டி காவல் சார்பு ஆய்வாளர் (பொறுப்பு) சுதர்ஷன், சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் அய்யாக்கண்ணு, தனிப்பிரிவு காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகானந்தம்,ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா கர்ணமகாராஜன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் ராஜசேகர், மாவட்ட செயலாளர் ரகுமான், மாவட்ட பொருளாளர் சரவனபாண்டியன், மாவட்ட இணை செயலாளர் முனியசாமி, ஒன்றிய தலைவர் சிறுநல்குமார், ஒன்றிய செயலாளர் பார்த்திபன், உட்பட ஊர்மக்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.







