இராணுவ வீரர் சாலை விபத்து ? மானாமதுரை சோகத்தில் மூழ்கியது !
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கல்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அஜித். இந்திய இராணுவத்தில் பணியாற்றும் இவர் நேற்று மானாமதுரை புதுப்பாலம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இறந்தாக சொல்லப்படுகிறது. இவரது உடலை கைப்பற்றிய மானாமதுரை காவல்துறையினர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். சாலை விபத்து என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் முன்விரோதம் காரணாம ஏதும் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்று போலீஸ் வேறு கோணத்தில் விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அஜித் தாய்..,” என் மகன் நேற்று வரை இருந்தான் இப்ப காணாமல் போய்விட்டான். என்ன நடந்ததென்று தெரியவில்லை. என் மகன் உயிர் போய்விட்டது. அஜித் அவன் தம்பி மீது பாசமா இருப்பான். அரசு அவனுக்கு அரசு வேலை வழங்கனும். என்று தழதழத்த குரலில் கண்ணீர் வடித்தார்.
மேலும் போலீஸ் தனது செய்தி குறிப்பில்…,” மானாமதுரை உட்கோட்டம் மானாமதுரை காவல் நிலைய சரகம் மானாமதுரை to சிவகங்கை ரோட்டில் 27.07.20 ஆம் தேதி இரவு வைகை ஆற்றுப் பாலம் அருகில் கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாமி மகன் அஜித் 24 என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனத்தால் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் .
அவரது உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது இது சம்பந்தமாக Whats-App-ல் “வாலிபர் வெட்டிக்கொலை” என தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இவ்வாறு செய்திகளை பரப்புவதில் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ” என தெரிவித்துள்ளனர்.







