--- --:--:-- --

அப்பாவ பாத்துக்கோங்க..அவரை குடிக்க வேண்டாம்னு சொல்லுங்க.. குழந்தையுடன் தாய் விபரீத முடிவு..!

9

ரோடு கருங்கல்பாளையத்தில் கடன் தொல்லையால் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு பின் தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க அவரது மனைவி ஹசீனா பல்வேறு மகளிர் குழுக்களிம் இருந்து கடன் வாங்கியுள்ளதாகவும் கடன் பிரச்சினையால் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இன்று காலை அசினாவுடன் சண்டையிட்டுவிட்டு ஜாகிர் உசேன் ஹோட்டல் சப்ளையர் வேலைக்கு சென்றதும் ஹசீனா, 11 மற்றும் 8 ம் வகுப்பு படித்து வரும் தன் இரு மகள்களுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் தூக்கிட்டு கொண்டதாக சொல்லப்படுகிறது.

 

தந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அவரை குடிக்க வேண்டாம் என சொல்லுங்கள் என ஒரு உருது மொழியில் எழுதப்பட்டிருந்த ஒரு உருக்கமான கடிதம் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon