சாலையில் சிறுமியை சுத்துப்போட்ட தெருநாய்..!
வாணியம்பாடி அருகே சாலையில் தனியாக நடந்து சென்று சிறுமியை மூன்று தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்க முயன்ற பொழுது அந்த சிறுமி செய்வதறியாது அச்சத்துடன் சாலையில் நின்றார். அப்பொழுது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் நாய்களை விரட்டி சிறுமியை மீட்டார்.
இது குறித்து சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில் தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





