--- --:--:-- --

திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன்..! இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை..!

11

ர்மபுரி அருகே திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் வீட்டின் முன் இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த ஞானமொழி என்பவர் விம்பிள்டன் முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

 

முரளிதரன் என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட 13 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களது காதலுக்கு முரளிதரனின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பெண்ணை நிச்சயம் செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது.

 

இதனால் மனமுடைந்த அவர் புதூர் கிராமத்தில் உள்ள முரளிதரனின் வீட்டின் முன் விஷம் அருந்தியுள்ளார். அதனை தடுக்க முன்வராத முரளிதரனின் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

 

இதனால் அங்கே அவர் துடிதுடித்து இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் முரளிதரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து உடலை வாங்கிச் சென்றுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon