சிறப்பு விமானங்களில் மதுரை வந்த தமிழர்கள்
வெளிநாட்டில் பணியாற்றி வந்த தமிழர்கள் வந்தே பாரத் திட்டம் மற்றும் சிறப்பு விமானங்கள் மூலம் மதுரைக்கு வந்தடைந்தனர். அபுதாபி ,மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த 726 பேர் சிறப்பு விமானங்கள் மற்றும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
இதில் அபுதாபியிலிருந்து புறப்பட்ட இரண்டு விமானங்களில் 366 பேரும், மாலத்தீவில் இருந்து 181 பயணிகளும் வந்தே பாரத் திட்டம் மூலம் துபாயிலிருந்து 127 பயணிகளும் தமிழகம் வந்தடைந்தனர். சுகாதாரத்துறை சார்பில் பயணிகளுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அரசு பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.







