--- --:--:-- --

டிக் டாக்கிற்கு மாற்றாக திருப்பூர் இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள chill 5 app..!

5

டிக் டாக் செயலிக்கு மாற்றாக முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் சில்ஃபை என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர். சில்ஃபை பயன்பாட்டிற்கு வந்த ஒரு மாதத்தில் அதிக பயனாளர்களை கவர்ந்து இருப்பதாக கூறுகின்றனர் இதனை உருவாக்கியவர்கள். இந்தியாவில் மிகப் பிரபலமடைந்த செயலி டிக் டாக் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.

 

பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய டிக் டாக் இந்தியா – சீனா ஆகிய நாடுகள் இடையே ஏற்பட்ட எல்லை பிரச்சினையில் எதிரொலியாக 59 செயலிகள் தடைசெய்யப்பட்டது. சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அண்மையில் டிக் டாக் செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது.

 

எனவே டிக் டாக்கிற்கு மாற்று வழியைத் தேடத் தொடங்கினர். இதனை கருத்தில் கொண்டு அதே போன்று பிளே ஸ்டோர் வருகை பதிவேட்டில் சில்ஃபை ஆப்பில் கையொப்பம் இட தொடங்கின. டப்ஸ்மாஷ் மியூசிக்கலி வரிசையில் வந்ததுதான் டிக் டாக் தற்போது அதற்கு போட்டியாக சில்ஃபை என்ற செயலியை வடிவமைத்திருக்கிறார்கள் திருப்பூரை சேர்ந்த பட்டதாரிகள்.

 

தற்போது பிரபலமடைந்து வரும் செல்போன் செயலி டிக் டாக் வீடியோக்கள் பாடல்கள், ஸ்டேட்டஸ், தத்துவ வாக்கியங்கள், மீம்ஸ் போன்ற பல அம்சங்கள் நிறைந்து இருப்பதாக கூறுகின்றனர். விதிமுறைகளுக்கு உட்பட்டு செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக பயனாளர்களின் தரவுகள் மிகவும் பாதுகாக்கப்படும் என்றும் கூறுகின்றனர் சில்ஃபை செயலியை வடிவமைத்தவர்.

 

குடும்பங்களுடன் செய்யும் கேளிக்கை வீடியோக்கள், சந்தோஷங்கள், நினைவுகள் உள்ளிட்டவைகளை பொது தளத்தில் பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக இந்த செயலி உள்ளதாகவும் ஆபாசம் இல்லாத வகையில் வீடியோக்கள் இடம்பெற செய்வோம் என்றும் சில்ஃபை சேலையை உருவாக்கியவர்கள் உறுதியாக கூறுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon