--- --:--:-- --

பணயக் கைதிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டும் சீனா..! கனடா பிரதமர் ஜஸ்டின் ஆத்திரம்..!

7

பணயக் கைதிகளை பிடித்து வைத்துக்கொண்டு வேண்டியதை அடைய நினைக்கும் சீனாவின் ராஜதந்திர முயற்சியை கனடா பிரதமர் ஜஸ்டின் அம்பலப்படுத்தியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறியதாக கூறி சீனாவின் ஹுவாய் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது.

 

கனடா அரசும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவரை விசாரணைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கனடா நாட்டவரான மைக்கேல் கவுரி,மைக்கேல் ஸ்பெவர் ஆகிய இருவர் உளவு பார்த்ததாக கூறி சீன அரசு கைது செய்தது.

 

இவர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டுமானால் மேக்மான் சூவை விடுவிக்க வேண்டும் என சீன அரசு கெடுபிடி செய்தது. நீதித்துறையில் சுதந்திரத்தில் தலையிடும் இந்த திட்டத்தை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து குற்றவாளிகளை நாடு கடத்த ஹாங்காங் உடன் செய்திருந்த உடன்பாட்டையும் ரத்து செய்துவிட்டார்.

 

இதே போல ஹாங்காங்கிற்கு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்து விட்டார். கைதிகளை பரிமாறிக்கொள்ளும் திட்டத்தை கனடா பிரதமர் நிராகரித்தது சீனாவின் பணைய கைதி ராஜ தந்திரத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஒருமுறை விட்டுக் கொடுத்து விட்டால் சீனா அடுத்த இலக்கை குறி வைக்கும் என்பதை அறிந்து கனடா பிரதமர் இவ்வாறு தவிர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon