இன்றைய தங்கம் விலை என்ன..?
ஜூன் மாதம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை ஜூலை மாத முதல் நாளில் அதிரடியாக குறைந்தது. தொடர்ச்சியாக கடந்த சில நாட்கள் காலை மாலை என இரு வேளையிலும் தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களுமே தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.13,400க்கும், சவரனுக்கு ரூ.1280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,07,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் ( ஜூலை 8) தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13,330க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.106,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,150க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.89,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





