--- --:--:-- --

சுறா மீனைக் கட்டிப்பிடித்தபடி நடனம் ஆடிய நீச்சல் வீரர்

6

ரஷ்யாவில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது நீச்சல் வீரர் ஒருவர் சுறா மீனை கட்டிப்பிடித்தபடி நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள நெப்டியூன் வணிக வளாகத்தில் பிரம்மாண்டமான மீன் கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அம்சங்கள் செய்யப்பட்டிருந்தன.

 

அப்போது நீச்சல் வீரர் ஒருவர் உள்ளே இறங்கி சுறாமீன் ஒன்றை கட்டி பிடித்து பார்வையாளர்களை உற்சாக மூட்டினார். செங்குத்தாக சுறாவை நிறுத்தி வைத்த அந்த வீரர் அதன் துடுப்புகளை கைகளை போன்று பயன்படுத்தி நடனமாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon