பள்ளிகளுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள்?
அரையாண்டு தேர்வு விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது.
ஆனால் உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஜனவரி மூன்றாம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை விடப்படும். எனவே தொடர் விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.






