வியாழன் கிரகத்தில் திடீரென உருவாகியுள்ள புயல்..!
வியாழன் கிரகத்தில் மிகப்பெரிய அளவில் புயல் உருவாகி இருப்பதையும் அங்கு சிவப்பு பள்ளத்தின் அளவு குறைந்து இருப்பதையும் ஹப்பிள் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி வியாழன் கிரகத்தை படம்பிடித்துள்ளது.
அந்த படத்தில் கிரகத்தின் வடக்குப் பகுதியில் மிகப்பெரிய அளவில் புயல் உருவாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த புயல் மணிக்கு 560 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பது பிரகாசமான வெள்ளை நிறத்தில் இருப்பதும் தெரியவந்து உள்ளது.
மேலும் வியாழனின் தெற்குப் பகுதியில் காணப்படும் கிரேட் ரெட் ஸ்பார்ட் எனப்படும் சிவப்பு பள்ளத்தாக்கின் அளவு குறைந்து வருவதும் ஒன்றில் தெரியவந்துள்ளது.






