பால் பவுடரை மட்டும் 20 ஆண்டுகளாக உட்கொண்ட இளைஞர்..!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் பால் பவுடரை மட்டுமே உணவாக உட்கொண்டு 20 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.
கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான கலையரசன் பிறக்கும்போதே கண், வாய், மூக்கு பகுதிகள் மூடிய நிலையில் இருந்ததால் அவருக்கு அந்த உறுப்புகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்நாக்கு மூடி இருந்ததன் காரணமாக இயல்பான மனிதர்களைப்போல அவரால் உணவு உட்கொள்ள முடியாததால் வேறு வழியின்றி கடந்த 20 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உட்கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக கலையரசன் எவ்வித நோய்க்கும் ஆளாகவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால் வறுமையில் வாடி வருவதால் தினமும் பால் செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருவதாக கலைஞரின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.






