ஆளுநரின் திடீர் ஒப்புதல் – முதல்வர் செய்த திடீர் மாற்றம்
ஆளுநருக்கு எதிரானது திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த ஆர்பாட்டம் கண்டன பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக கூட்டணி கட்சி தலைவர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் ஆளுநர் மாளிகை முன்பு ஏப்ரல் 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் ஆளுநர் கிடப்பில் வைத்துள்ள பிற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரியும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநரின் பேச்சை கண்டித்தும் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டை திடலில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டமாக நடைபெறும் நடைபெற வைக்கப்பட்டுள்ளது.





