--- --:--:-- --

ராமநாதபுரத்தில் 200 மீட்டருக்கு கடல் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்..!

2

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் 200 மீட்டருக்கு மேல் கடல் உள் வாங்கியதால் படகுகள் சேதம் அடைந்தன. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் நடித்த சின்ன பாலம் தோப்புக்காடு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் நேற்று உள்வாங்கியது.

 

சுமார் 200 மீட்டருக்கு மேல் கடல் உள் வாங்கியதால் அரிய வகை பவளப்பாறைகள், நட்சத்திரம், கடல் உள்வாங்கியதால் கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டு படகுகள் மற்றும் வைபர் படகுகள் தரை தட்டின. இதனால் படகுகள் சேதமடைந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

 

இந்த பகுதிகளில் அடிக்கடி கடல் உள்வாங்குவதாக தெரிவித்துள்ள மீனவர்கள் கடல் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon