--- --:--:-- --

கலாஷேத்திரா விவகாரம் மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை..!

5

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கலாஷேத்ராவின் மாநில மனித உரிமைகள் ஆணைய குழு இன்று விசாரணை நடத்த உள்ளது.

 

மத்திய அரசின் கலாஷேத்ரா சென்னை திருவான்மையூர் பகுதியில் கலாஷத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கல்லூரி பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்த நிலையில் கலாஷேத்ரா கல்லூரியில் மனித உரிமைகள் ஆணையக் குழு இன்று விசாரணை நடத்த உள்ளது.

 

ஏற்கனவே மகளிர் ஆணையம் விசாரித்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணையமும் இன்று விசாரணையை தொடங்குகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறு மாணவிகளின் அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon