--- --:--:-- --

சாதிப் பெயரைச் சொல்லி சக மாணவரை நெருப்பில் தள்ளிய மாணவர்கள்..!

6

திண்டிவனம் அருகே சிறுவனை சாதிப் பெயரைச் சொல்லி தீயில் தள்ளிவிட்டதாக மூன்று சிறுவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவர்கள் சாதி பெயரை சொல்லி அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கருமாதி கொட்டகை அருகில் நின்று கொண்டிருந்த மற்ற மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்து தீயில் தள்ளி விட்டுள்ளனர். காயமடைந்த மாணவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாணவரை தள்ளிவிட்ட புகாரில் மூன்று சிறுவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுக்குட்பட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

Right Menu Icon