குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு..!
63வது குடியரசு தினத்தை முன்னிட்டு இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையில் சிறப்பாக பணியாற்றிய வீரர்கள் 384 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார்.
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் விருது அறிவிக்கப்பட்ட வீரர்களுக்கு சௌரிய சக்ரா, பரம்விசிஸ்ட், உத்தம்யுத் சேவா பதக்கம், அதிவிசிஸ்ட் சேவா பதக்கம் வென்றவர்களுக்கு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடியரசு தலைவர் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது நாட்டில் நிலவும் தற்போதைய சூழலில் பல்வேறு விவகாரங்களை குடியரசுத் தலைவரிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாக தெரிகிறது.





