--- --:--:-- --

பேருந்து ஓட்டுனரை கன்னத்தில் அறைந்த மாணவர்கள்..!

5

சென்னையில் மாநகர பேருந்து ஓட்டுனரை தாக்கிய சம்பவத்தில் பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர். மதுரவாயிலை சேர்ந்த காளிதாஸ் மாநகர அரசு பேருந்தை ஓட்டிச் சென்றார். அப்போது பேருந்து நிறுத்தத்தில் ஏறிய தனியார் பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியும் பேருந்தின் மேல் ஏறியும் அட்டகாசத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

 

இதனால் புரசைவாக்கம் சந்திப்பில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் போக்குவரத்து போலிசாரிடம் முறையிட்டுள்ளார். மாணவர்களை போக்குவரத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். பெரம்பலூர் வழியாக சென்று கொண்டிருந்த போது 4 மாணவர்களில் ஒருவர் ஓட்டுநர் காளிதாஸ் கண்ணத்தில் இருமுறை அறைந்துள்ளனர்.

 

ஓட்டுநர் பேருந்தை நிறுத்திய உடன் 4 பேரும் தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பான புகார் விசாரணையில் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன், ஓட்டுநரை கன்னத்தில் அறைந்த 19 வயதான தினேஷ் என்ற மாணவரை கைது செய்தார்.

 

Right Menu Icon