--- --:--:-- --

சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ்.!

4

டலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. போராட்டங்களை தடுக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவை கோட்டாட்சியர் பிறப்பித்திருந்தார். தற்பொழுது அது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

 

பொதுமக்கள் நலன் கருதி 144 தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக சிதம்பரம் கோட்டாட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிதம்பரம் கோவில் கனகசபையில் மக்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்த புகாரால் போராட்டங்கள் நடந்தன.

 

இந்த சூழ்நிலையில் தற்போது சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

 

Right Menu Icon