தோட்டத்து வீட்டில் காயங்களுடன் தூக்கில் தொங்கிய மாணவி..!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த அனுராதா என்ற அந்த மாணவி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி மாணவியை காணாமல் தேடி வந்த நிலையில் ஊருக்கு வெளியே தோட்டத்து வீட்டில் உடலில் காயங்களுடன் அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரை அடித்து கொலை செய்திருக்கின்றனர் எனக் கோரி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.





