--- --:--:-- --

இன்று இரவு முதல் வேலை நிறுத்தம்.. NLC ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவிப்பு..!

9

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று சனிக்கிழமை இரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை என்எஸ்சி தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதுபோல் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. கோட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள், என்எஸ்சி அதிகாரிகள், ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் என நான்கு தரப்பினர் கலந்து கொண்டனர்.

 

மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு பொதுச் செயலாளர் திட்டமிட்டபடி இன்று சனிக்கிழமை இரவு வேலை நிறுத்த அறிவிப்பு வெளியாகும் என்றும் என்எல்சி நிர்வாகம் ஒரு சுமூக முடிவு எடுத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon