வெள்ளத்தில் தத்தளிக்கும் இமாச்சல்.. ஹெலிகாப்டரில் உணவு வழங்கும் பரிதாபம்..!
ஹிமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் ராணுவத்தினர் உணவுப் பொட்டலங்களை வழங்கினர். வீடுகள், உடைமைகள் என அனைத்து பொருட்களையும் தண்ணீர் சுருட்டி சென்று விட்டதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இதனிடையே இன்னும் 15 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் ஹிமாச்சல் பிரதேச மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.






