--- --:--:-- --

கல்லூரி, பள்ளி முடிந்து ஆசையாய் வீட்டுக்கு ஓடி வந்த பிள்ளைகள்.. பெற்றோர் கோலத்தை கண்டு அதிர்ச்சி..!

10

சென்னையில் கடன் தொல்லை காரணமாக தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சிட்லபாக்கத்தை சேர்ந்த நபர் ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

 

இவரது மனைவி ஜான்சி ராணி. குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் மகன் மற்றும் பள்ளியில் படிக்கக்கூடிய மகள் உள்ளனர். தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக பலரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

 

ஆனால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த தம்பதியினர் தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

 

மாலை வீடு திரும்பிய மகன், மகள் இருவரும் தாய், தந்தை தூக்கில் தொங்கியவரை பார்த்து கதறி அழுதுள்ளனர். தகவலறிந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon